விவசாயிகள்... மறக்க வொன்னா..ஜீவன்..!!

”பாபு ஜெகஜீவன் ராம் அகில இந்திய கட்டுரை போட்டி”..என்ற தகவலை கொண்டிருந்த அந்த விளம்பரம்..பள்ளிகள், கல்லூரிகள், பல்கலை கழகங்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து கட்டுரையை எதிர் நோக்கி அதற்கு பரிசுகளையும் அறிவிக்கிறது...!
இந்தியாவின் யாரோ ஒரு தலைவரை பற்றிய நினைவு படுத்தலை.. வழக்கமான..மரபு சம்பிரதாயம் சார்ந்ததாக இதனை எடுத்துக் கொள்ளமுடியாது..! எனெனில் விவசாயிகளின் இன்றைய வாழ்க்கைக்கு.. ஓரளவிலான மேம்பாட்டிற்கு பாபுஜி எனப்படும் பாபு ஜெகஜீவன் ராமின் பங்களிப்பு...பயிரின் பச்சையம் போன்று இன்றியமையாதது...!
பீகாரில், சந்த்வா எனும் இடத்தில் பிறந்து, இளம் வயதில் தந்தையை இழந்த ஜெக ஜீவன், கடுமையான வறுமை காரணமாக..தனது தாயாருடன் கல்விக்காக ஆரா எனும் அருகாமை டவுனுக்கு இடம் பெயர்ந்தார்..1922 ஆம் வருடம் ஆரா டவுன் ஸ்கூல் அவருக்கு தீண்டாமை,சாதி, மத பாகுபாட்டை அதன் கசப்பை...பட்டுக் கம்பளம் போட்டு அவரை வரவேற்று..உணர்த்தியது..!
ஜெகஜீவன் படித்த அந்த பள்ளியில் இரண்டு குடி நீர் மண்பாண்டங்கள் இருந்தது..! ஒன்று இந்துவகுப்பை சார்ந்த மாணவர்களுக்கு..மற்றொன்று முஸ்லீம் மதத்தை சார்ந்தவர்களுக்கு..!! தலித் சமுதாயத்தை சார்ந்த ஜெக ஜீவன் தன்னையும் ஒரு இந்து என நினைத்துக் கொண்டு.. இந்துக்களுக்கான பானையில் நீர் அருந்தினார்..!! வந்தது விபரீதம்.. !!அவர் அந்த பானையில் நீர் அருந்தியது குறித்து புகார் பத்திரம் வாசிக்கப் பட்டு அது தடுக்கவும் பட்டது..!!
மிகுந்த நீதிமானானாகவும்.. அந்த கால கட்டத்தின் நடைமுறைக்கு சாட்சியாகவும் இருந்த தலைமையாசிரியர்.. ஜெக ஜீவனின் குடி நீர் பிரச்சினைக்கு முடிவு கட்ட விரும்பி.. துணிந்து ஒரு முடிவு எடுத்தார்..! அது வேறு ஒன்றுமில்லை... புதிதாக ஒரு பாணயை வைத்து அது தலித்துகளுக்கானது... என அறிவித்தார்..!?!.. என்ன ஒரு நீதி பாருங்கள்..!!
இதில் நாம் புரிந்துக் கொள்ள வேண்டிய அம்சம்..அதுவரை தலித் மாணவர்களுக்கு குடி நீர் வசதி செய்து கொடுக்கப் படுவதை..யாரும் கவனத்தில் கொள்ளவே இல்லை..என்பதே..!?!
பிற்காலத்தில்..இந்தியாவின் துணை பிரதமாராகவும்.. இளம் மந்திரியாகவும் அரசியலில் பெரும் சக்தியாக விளங்கிய ஜெக ஜீவன் தனது வாழ் நாளில் பலமுறை வேதனையுடன் குறிப்பிட்ட சம்பவமாகவும், இந்த ”மூன்றாவது பாணை” .. இருந்தது..!! தலைமை ஆசிரியர் வைத்த அந்த பாணை பலமுறை..அவரால் உடைபட்டதும்.. ஆனாலும் உள்ளத்தின் அந்த பாகுபாட்டு வடு உடைபடாமல் முழுதாகவே.. இருந்ததும் தான் உண்மை..!! அதே பள்ளிக்கு பின்னர் மதன் மோகன் மாள்வியா உரையாற்ற வந்ததும்.. ஜெக ஜீவனை.. நன்கு படித்து.. பனாரஸ் யுனிவர்சிட்டிக்கு வர அழைப்பு விடுத்ததும்.. நம்பிக்கையை விதைத்ததும் பெரிய தாக்கமாக அவருக்கு இருந்தது..!
இவ்வளவு நடைமுறை சிக்கலிலும் தனது கல்விக்கு எந்த ஒரு பாதிப்பு வராமல், மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்து, பனாரஸ் இந்து யுனிவர்சிட்டியில் அறிவியல் பாடத்தில் இணைந்தார்..!
அங்கும் சாதி பாகுபாடு அவரை விடவில்லை..!! ஹாஸ்டலில் உணவு பரிமாறுவதில் இருந்து தங்குவதில்...அவ்வளவு ஏன் முடி வெட்டிக் கொள்வதில் கூட அவரை ஒதுக்கிய நிலை இருந்தது..! தனது முடியை வெட்டிக் கொள்ள..பனாரசில் இருந்து காசிப்பூர் வரை பயணப் பட வேண்டியதாக இருந்தது..!!
மேற்கண்ட நிகழ்வுகள்.. அவரை தீண்டாமை, ஒடுக்குமுறை,சமூக பொருளாதர பிரிவினை குறித்து சிந்திக்கவும்.. செயல் படவும்.. வைத்தன..விளைவு..ஜெக ஜீவன் ராம் நாத்திகர் ஆனார்..!! இத்தகைய மனித நேயமற்ற பாகுபாடுகள் அதனை வைத்திருக்கும் மதம் அதன் தொடர்பிலான கடவுளர்கள் இருக்க வாய்ப்பில்லை என்பதை அறிந்த கடவுள் மறுப்பாளர்.. ஆனார்..! பின்னாளில் காந்தியுடன் சேர்ந்து பணியாற்றிய நிலையிலும் அவர்தம் கடவுள் மறுப்பை கைவிடவே இல்லை...!! ;பின்னே....!கடும் பசியை தாளாமல்.. வயிற்றை தடவி கொள்பவனும்.. விருந்தருந்தி.. வயிற்றை வருடிக் கொள்பவனும் ஒன்றாகி விடுவார்களா...என்ன..?
அனைத்து அவமானப் படுத்தலுக்கும் ஈடாக ஹிந்து பனாரஸ் யுனிவர்சிட்டி 2007ம் ஆண்டு முதல்..ஜெக ஜீவன் ராம் பெயரில் சமூக அறிவியல், சாதி பாகுபாடு, சாதியின் பெயரிலான பொருளாதார பின் தங்குதல் இவற்றை குறித்து ஆராய ஒரு இருக்கையை நிறுவி அதன் வழி இன்றளவும்...அது குறித்தான ஆராய்ச்சியை நிதி அளித்து ஊக்குவித்து வருகிறது..!!
இந்தியாவில்.. சனாதான சாதி அமைப்புகளை மீறி..ஒரு மதிப்பு மிக்க..மனிதாபிமான சட்டம் 1935 ல் அமுலுக்கு வந்தது... !அதாவது தாழ்த்தப்பட்ட மக்களும் சட்ட சபையில் இடம் பெறலாம் என்பதான அந்த சட்டத்தின் வழி.. ஜெக ஜீவன் ராம் பீகாரின் சட்ட சபையில் இடம் பெற்றார்..சாதரணமாக அந்த இடத்தை ஜெக ஜீவன் அடைந்து விடவில்லை.. தேசீய வாதிகளும், ஆங்கிலேயர்களும்.. அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு அவர் பொது வாழ்வில் பங்கு கொண்டிருந்தார்.. !
நேபாள பீகார் பூகம்பத்தில் பணியாற்றியது..பீகாரின் சாதி..ஒடுக்குமுறைகள்..சமூக.. பொருளாதார நிலை, தாழ்த்த பட்டோருக்கான அமைப்புகளை நிறுவதல்..என குரலற்றவர்களின் குரலாக இருந்த அவர்.. அம்பேத்காருக்கு அடுத்த படியாக பெரிதும் மதிக்கப் படும் நபராக இருந்த ஒரே ஒப்பற்ற தலைவராக பீகாரில் அடையாளம் காணப்பட்டார்..!! பின்னாளில்.. ஆங்கிலேயரின் பீகாரின்..தண்ணீருக்கான வரி விதிப்பை.. கண்டித்து வகித்து வந்த சட்ட சபை உறுப்பினர் பதவியை தூக்கியும் எறிந்தார்..!!
நாடு சுதந்திரம் அடைந்த நிலையில்..இந்திரா காந்தி அமைச்சரவையில் 1974 முதல் 1977 வரை இந்தியாவின் விவசாய மற்றும் பாசன அமைச்சராக. சவால் மிகுந்த பணியில்...விவசாயிகளின் தன்னம்பிக்கைக்கும்..உலக அளவில் இந்தியாவிற்கு பெருமையையும், தேடித்தந்தவராக இருந்தார்,,!
பசுமை புரட்சி எனும் பசி தீர்க்க உதவிய வார்த்தை.. அமெரிக்காவில் 1968 டாக்டர் வில்லியம் காட் என்பவரால் உருவாக்கப் பட்டது..! 1974 ஆம் ஆண்டு இந்தியா கடும் பஞ்சத்தை எதிர் கொண்டது..!! பட்டினி சாவுகள் பெருகின..! எங்கும் பசித்த வயிறுகள்.. காலி தட்டோடு அலைந்தது..!! அப்போது தான் பசியையையும், வறுமையையும், சாதி, பொருளாதார பின்னடைவு அனைத்திலும் சொந்தமாக பரிட்சித்து பார்த்திருந்த ஜெக ஜீவனின் மந்திரிப் பதவி இந்தியாவிற்கு.. குறிப்பாக விவசாயிகளுக்கு உதவி.. மக்களுக்கும் வயிற்றில் பால் வார்த்தது...!
பாரம்பரிய நெல் கோதுமை இரகங்களை விட, அதிக விளைச்சல் தரும் குட்டையான, வீரிய ஒட்டு, குறைவான நாட்களில் பலன் தரும் இரகங்களை உருவாக்கி, தேர்வு செய்வதிலும்.. இந்தியா முழுவதும் அது விவசாயிகளால்..கையாளப் படவும்.. அது குறித்தான விரைவான நடவடிக்கைகளிலும் ஜெக ஜீவன் அர்ப்பணிப்பு உணர்வுடன்..முழு மூச்சுடன் செயல் பட்டார்..!
பாரம்பரிய..இரகங்களை விட...200 முதல் 300 சதவீதம் வரை அதிக மகசூலை கண்ட அனைத்து ஆரம்ப கால கோதுமை, நெல் இரகங்களும் ஜெக ஜீவன் ராமின் ஆர்வம், ஊக்குவிப்பு, விஞ்ஞானிகளை தொடர்ந்து மாதா மாதம் கட்டாய கூட்டம் நடத்தி.. சந்தித்து அவ்வப்போது கண்காணித்ததின் தொடர்பால் வந்த வெற்றியே..!!
1968 ஆம் ஆண்டு இந்தியாவின் பட்டினியை காணாமல் போக செய்த..17 மில்லியன் டன்...உணவு தானிய உற்பத்தி..பழைய முறையில் வழக்கமாக செய்யப் பட்ட12 மில்லியன் டன்னை பின்னுக்கு தள்ளி பசியற்ற இந்தியாவை உலக அரங்கில் நிறுத்தியது..!
இந்த பெருமிதம் குறித்து, ஜெக ஜீவன் ராம் கேட்டுக் கொண்டதன் பேரில் பிரதமர் இந்திரா காந்தியும், கோதுமை புரட்சிக்கு அடையாளமாக ஒரு தபால் தலையை, இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் நூலக கட்டிடத்தை தாங்கி ஒரு அஞ்சல் தலையை வெளியிட்டார்..!!
எந்த ஒரு தொழில் நுட்பமும், ஆராய்சியும், உரங்களும் புதிய இரகங்களும் அனைத்து சிறு, குறு விவசாயிகளுக்கு சென்றடைய வேண்டும் என்பதில் மிகவும் குறியாக இருந்தார்.. ஜெக ஜீவன் ராம்.. !!அதன் விளைவாக உருவானதே.. விவசாயிகளுக்கு கடன் வழங்குதல் எனும் மாபெரும் திட்டம்..! கடனை பெற்று.. அதன் மூலம் அனைத்து புதிய உருவாக்கங்களும், விவசாயம் சார்ந்த அனைத்தையும்.. அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி.. சேர்த்த வகையில்..அது பெரும் விவசாயிகள் இயக்க செயல் பாடாக இன்றளவும் தொடரும் நிலையில்..ஜெக ஜீவன் ராமின் திட்டம் மிகவும் பாராட்டப் படவேண்டிய.. விவசாயிகள் நன்றியறிதலுடன் நினைத்து பார்க்க வேண்டியதாகும்..!
பாரம்பரிய விவசாய அறிவு மற்றும் தொழி நுட்பம் இவற்றை ஒரு சேர பயன் படுத்துதல்..சூழலியல்,ஆர்கானிக் விவசாய முறை,செயற்கை மழை தருவிப்பு போன்ற துறைகளிலும் ஈடுபாடு கொண்டு விஞ்ஞானிகளை ஊக்குவித்தார்..!! ஜெக ஜீவனின் ஈடுபாட்டுடன்.. நமதுஅண்ணாமலை பல்கலை கழகத்தின் சார்பாக மேற்கொள்ளப் பட்ட இசையின் மூலம் பயிர் வளரும் என்ற தலைப்புகளில், நிதி உதவி அளித்து.. ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப் பட்டது..!!
எம் எஸ் சுவாமி நாதன் உள்ளிட்ட பல வேளாண் விஞ்ஞானிகளின் அவரின் கீழ் செயல் பட்டவர்களே..!!
விளைபொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, அதற்கு நல்ல விலை கிடைக்கவில்லை எனில்.. தொடர்ந்து அறிவியல் பூர்வமான முயற்சிகளையும்...புதிய இரகங்களை பயன் படுத்த மாட்டார்கள் என்பதை ஒரு விவசாயியாக அறிந்திருந்த, ஜெக ஜீவன் அவர்கள், இந்திய உணவு கழகம் அப்போது அறிவித்திருந்த கோதுமை விலைக்கு அதாவது பாரம்பரிய இரகமான ஆம்பர் மற்றும் குட்டை ஒட்டு இரக கோதுமைக்கும் இடையில் இருந்த விலை வித்தியாசத்தை,..
புதிய இரகத்திற்க்கான குறைந்த விலையை.. அரசே ஏற்றுக் கொண்டு,அதனை ஈடாக அளித்து... விலை வித்தியாசத்தால் விவசாயிகள் பாதிக்கப் படாமல் தொடர்ந்து.. தொழில் நுட்பத்தை பயன் படுத்திட முன்னோடியாகவும்.. ஆக்கப்பூர்வமாகவும் செயல் பட்டு அது இன்றளவும் நடைமுறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது..!
இந்தியாவின் 60 சதவீத நிலங்கள் வானம் பார்த்தவை என்பதையும் உணர்ந்து, ஜெக ஜீவன், நிலமற்ற விவசாய ஏழை கூலித் தொழிலாளர்களையும், வருடா வருடம் பருவகால மாறுதல்களால் ஏற்படும் வறுமை, பணப் பற்றாக்குறை, கூலி பிரச்சினைகள், வேலையின்மை அனைத்தையும் கவனத்தில் கொண்டு, கால் நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, ஒருங்கிணைந்த பண்ணையம், கலப்பு பண்ணை போன்றவை வளர்ச்சி பெற திட்டங்களை தீட்டி அது நடைமுறை படுத்த படவும் உதவி, விவசாய ஆராய்ச்சி நிறுவனங்கள் அரசை அனைத்திற்கு சார்ந்திராமல், நிதி தன்னிறைவும், சுயமாக செயல் படவும் வழி வகுத்தார்..! கே வி சி எனப்படும் கிருஷி விக்யான் செண்டர்கள் அமைக்கப் படவும் காரணாமாக இருந்தார்..!
உணவை பலருடன் சேர்ந்து, குறிப்பாக வேளாண் விஞ்ஞானிகளுடன் சேர்ந்து
அமைச்சராக இருந்த போது, விவாத்திக் கொண்டே உண்ணும் பழக்கமுடைய ஜெக ஜீவன் ராம்..அடிக்கடி கூறும் வார்த்தை..”உணவு விஷயத்தில் கவனமாக இருங்கள்..அது மனிதனின் நாக்கு வழியாக வயிற்றுக்கு செல்கிறது” இதன் அர்த்தம், மரபு கலப்பு,தொழில் நுட்பம்,ஆராய்ச்சிகள் அனைத்தும் கவனமுடன் செயல் படுத்தப் பட்டு இயற்கை...அதன் பிரமீடு விகிதம் மாறாமல்.. பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதே...!!
இன்றும் பொருந்தக் கூடியதாகவே அந்த வார்த்தைகள் இருக்கின்றன..! ஒடுக்கப் பட்ட மனிதனாக..பீகாரில் பிறந்து.. இன்றளவும் இந்தியா முழுவதும் செயல் படுத்தப் படும் விவசாயம் எனும் ஜீவ செயல் பாட்டிற்கு வித்திட்ட அந்த மாமனிதரை...மறப்பது அவ்வளவு சுலபமல்ல..!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக