
ஏவிசி மயிலாடுதுறை கல்லூரி காலத்தில்..ரீடர் டைஜெஸ்ட் மற்றும் நேஷனல் ஜியாகிரபி புத்தகங்களை லைப்பரரியில் சென்று புகைப்படங்களை பார்த்து....படிக்கவும் முயற்சி செய்வதுண்டு...!! ஆங்கிலம் அவ்வளவாக புரியாத நிலையில் படங்களை பார்ப்பது அவ்வளவு தத்ரூபமாக....பிரமிக்கும் படியாக இருக்கும்..!!இத்தகைய புத்தகங்களை விலைக்கே, வாங்குவர்கள் கூட, என்ன காரணத்தாலோ, அதனை ஒரு போதும் தூக்கி போடவோ..எடைக்கு விற்கவோ மாட்டார்கள்..! சேர்த்த வண்ணம் இருப்பர்...!அவற்றின் இனம்புரியாத வசீகரம் அப்படி.!!
அப்படித்தான் இந்த படத்தை நேஷனல் ஜியாகரபியின் புத்தக அட்டை படத்தில் கண்டதாக நினைவு...இதைத் தவிர இது குறித்து.வேறு ஏதும்..என்னால் அறியப் படாத நிலையில்...பின்னர் இந்த புகைப் படத்தை எடுத்த.. ஸ்டீவ் மெக்ரே..என்பவர்..திரும்பவும் அதே பெண்ணை, 2002ம், ஆண்டு, மீண்டும் படமெடுத்தார் என்ற செய்தி.. மட்டும் காதில் விழுந்தது.
சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பில், ஆப்கான் இருந்து வந்த போது, 12 வயது பெண்ணாக, பாகிஸ்த்தான் அகதி முகாமில், ஸ்டீவ் மெக்ரே இந்த பெண்ணைக் கண்டு, இந்த புகழ்மிக்க போட்டோவை எடுத்து, அதுவும் நேஷனல் ஜியாகரபி புத்தகத்தில் அட்டைபடமாக வந்தது..மெக்ரே பலவித போட்டோக்களை ஆப்கான் மண்ணில் இருந்து எடுத்து வெளியிட்ட போதும் இந்த ஒரு புகைப்படம் 80களில் உலகில் புகழ் பெற்ற படமாக இருந்தது..!!
ஒட்டு மொத்த ஆப்கானின் பெண்களின்,குழந்தைகளின் நிலைமையை, பாகிஸ்தானுக்கு புலம் பெயர்ந்த அகதிகளை எடுத்து காட்டும்...வெறித்த இந்த ஒரு ஜோடி கண்கள் உணர்த்திய உணர்ச்சிகள் ஏராளம்...!
பல வித ஆர்ட் கேலரி, கண்காட்சிகளில் ,மக்களால் காணப் பட்டு, மீண்டும் மீண்டும் தூரிகைகளால் வரையப் பட்டும் கொண்டிருந்தது..!! ஷர்பத் குலா என்ற பெண்ணை மீண்டும் கண்டு, அவரை, இப்போதைய நிலையில் போட்டோ எடுக்க, அமெரிக்க புகைப் படக்காரரான, ஸ்டீவ் மெக்ரே, மீண்டும் ஆப்கான் பயணித்தார்..!! 2002 ஆம் ஆண்டு அவரை தேடியலைந்து, ஆப்கானின், தோரா போரா மலைப் பகுதியில் பஷ்தூன் மொழி பேசும் ஒரு பாரம்பரிய கூட்டத்தினர் மத்தியில் கண்டார்..!!
அவரின் மொழியிலேயே... சொல்வதாக இருந்தால்..”காலமும் வாழ்வின் கடுமையும் அவரை வாட்டியிருந்தது,.. இளமை பொலிவு இழந்து, அவரின் தேகம், காய்ந்த தோலை போலிருந்தது..முகவடிவம் தனது கச்சிதமான அளவுகளை இழந்து.. தளர்ந்திருந்தன..! ஆனாலும்...அந்த பச்சை நிற வெறித்து நோக்கும் கண்கள் மட்டும் ஓளி இழக்காமல், தளராமல் இருந்தது...!!”
மெக்ரே, இரண்டாம் முறை ஷர்பத் குலாவை சந்தித்தபோது...அவருக்கு திருமணம் ஆகி, மூன்று குழந்தைகளும் இருந்தனர்...அவரின் கணவரின் அனுமதியோடு அவரை வித விதமாக தனியாகவும் குழந்தைகளோடும் ஆசை தீர புகைப்படம் எடுத்தார் ஸ்டீவ் மெக்ரே..!!
1984, 2002 ஆண்டுகளின் தொடர்ச்சியில் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே உலக புகழ் பெற்ற ஷர்பத் குலா எனும் பச்சை கண் பெண்....பெசாவ்ர் எனும் பாகிஸ்த்தான் நகரில், போலி அடையாள அட்டை, ஆவணங்களுடன், பாகிஸ்தானில் தங்கி இருந்ததற்காக, பெடரல் இன்வெஸ்டிகேஷன் அத்தாரிட்டியினரால் கைது செய்யப் பட்டுள்ளார்..!! இதனை, இவர் போன்ற இதரர்களுக்கு வழங்கிய வகையில் இதற்கு உடந்தையாக இருந்த பாகிஸ்தானின் 18 அதிகாரிகளும் தண்டனையை எதிர் நோக்குகின்றனர்..!
போலி தேசிய அட்டைகளை கண்டறியும் முயற்சியில் பாகிஸ்தான் அரசு மும்முரமாக உள்ளது.. இது வரை 9 கோடிக்கும் அதிக மான அட்டைகளின் விபரங்கள் மறுமுறை சரிபார்க்கப் படுகின்றன...!..60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அட்டைகள்..போலிகள் எனவும் கண்டறியப் பட்டுள்ளன..!
வரும் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், ஆப்கானின் 14 லட்சம் அகதிகளையும் அவர்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்து வருகிறது..உலகிலேயே அதிக அகதிகளை உடைய 3வது நாடான பாகிஸ்தான்...!!
ஒரு உலக அளவில் புகழ் பெற்ற பெண்ணாக இருந்தும், ஷர்பத் குலா, இருக்க இடமின்றி, தாயகத்தை துறந்து, தனது குழந்தைகளுடன் கைது செய்ய்பட்டுள்ளது....மனதை பிழிகிறது..!! இவர் செய்த குற்றம் உண்மை என நீருபிக்கப் பட்டால் கடுமையான அபராத தொகையுடன்.. சுமார் 14 வருட சிறைத்தண்டனையும் உண்டு...!!
சுமார் 42 வயதை தாண்டிய, காலத்தின் கடுமையில், வாட்டி வதையுண்ட, தனது குழந்தை பருவத்தை அகதி முகாம்களில் கழித்த ஒரு பெண், இப்போது.. தன் குழந்தைகளுடன் இன்னமும் அதே மண்ணில்.. அமைதியை இழந்து..தனது கூரிய பச்சை கண்களால்.. இந்த மானுடத்தின் மார்பை வாளால் துளைப்பது போன்ற பார்வையில்...தனக்கு மறுக்கப் பட்ட மனித உரிமையை மீட்கமுடியா கையறு நிலையில்....வழக்கம் போலவே வெறித்து நோக்குகிறார்.......தான் கைது செய்யப் பட்ட போது எடுக்கப் பட்ட புகைபடத்திலும்....!!?!!
அனைத்தயும் படைத்தவனை...பெருமையுடன்... ஐந்து முறை தொழும் மனித கூட்டமும், அவர்களின் சட்டமும் இந்த பச்சை கண்..வெறித்த பார்வைப் பெண்ணை நிம்மதியாக வாழவிடுமா..?? என்று தெரியவில்லை....!!
கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லாவிட்டாலும்...இந்த பெண்ணுக்கு வாழ்வையும், நிம்மதியையும் அளிக்க.......வேண்டுகிறேன்....!!! எனக்காக இல்லாவிட்டாலும்....!!
அல்லாவே....உனக்காக...தனது பாகிஸ்தான அடையாள ஆவணங்களுடன் 2014 ம் ஆண்டு மெக்கா சென்று....ஒரு முஸ்லீமாக.. வாழ் நாள் கடமையை நிறைவேற்றிய.......பச்சைகண்ணை மூடி உன்னை வணங்கிய...!
கேமரா மூலம் உலகையும்,....
உலகமும்,..தான், ..முதல் முதலாக.. கேமரா மூலம்...கண்ட....
அந்த 12 வயது.... பச்சைக் கண் சிறுமிக்காக..!!!
இதயத்தை வாள் கொண்டு,..அறுக்கும்..!!...அந்த.. பார்வைக்காக..!!
நாக.பன்னீர் செல்வம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக