தென்னிந்தியர்களாகிய நாம், டெல்லியில் இண்டர்வியுக்களில் கலந்து கொள்வதற்கும்..வடஇந்தியர்கள் கலந்து கொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு...கால் மேல் கால் போட்டுக் கொண்டு.. சோபாவில் கைகளை நன்கு பரப்பி வைத்து.. மாப்பிள்ளை போல உட்கார்ந்து கொண்டு போனால் போகிறது என்று உன் வேலைக்கு வந்திருக்கிறேன்.. !!
மற்றபடி அது ஒன்றும் எனக்கு தேவையில்லை..!!?!! என் கிற மனப்பானமையில் திமிராக இருப்பார்கள்... நாமோ பதை பதைப்புடன்.. மே ஐ கமின் ....!! என்று சொல்ல வேண்டும்,..?!!! சிட் டவுன் என்று சொன்னால் மட்டுமே... உட்காரவேண்டும்... என டென்சனுடன்...பல் வேறு மனதயாரிப்புகளுடன் இருப்போம்...!! ஆனால் வந்திருக்கும், வட இந்திய இளைஞர்களை பார்த்தால் பொறாமையாக இருக்கும்..!! ஆனால்.பொறுப்பின்றி இருக்கும் அவர்களுக்கு பெரும்பாலும் வேலை கிடைக்காது..!! தென்னிந்தியர்களை போல அடிமைகள் கிடைக்கும் போது அவர்களுக்கு எப்படி அது கிடைக்கும்...!!?!!
மேலும் ஃபைலில், அனைத்து சர்டிபிகேட்டுகளையும் வைத்து, வகைப் படுத்தி,திருப்பதி பிரசாதம் போல.. நாம்...கேள்வி கேட்பவர்களிடம் மிகுந்த மரியாதையுடன் கொடுப்போம்...என்னுடன் இண்டர்வியூக்களுக்கு வந்த பல பேர்...பேண்ட் பின் பாக்கெட்டில்....4 அல்லது 8 ஆக மடித்து வைத்திருந்து, அதனை, அப்படியே எடுத்து கொடுப்பர்...அது வேறு ஒன்றும் இல்லை...படித்த சர்டிபிகேட்டுகள் தான்...!!?!!
அப்புறம் நிருலாஸ் எனும் புகழ் மிக்க ரெஸ்ட் ராண்டில் கேஷியர் வேலைக்கு சேரந்தவுடன்...கன்னோட் பிளேஸ் சென்று, பழையவிலையில் கறுப்பு பேண்ட் வெள்ளை சர்ட் வாங்கி... யூனிபார்ம் தான் வேறென்ன...?? அதற்கு ஏற்றார் போல ஷூவும் வாங்கியாயிற்று...பணி நேரம்...இரவு 7-00 மணி முதல் நள்ளிரவு 12-00 மணிவரை...அருகாமை , சாந்தி பாத்தின் தூதரகத்திலிருந்து பல வெளி நாட்டவர்கள் வாடிக்கையாக வருவதுண்டு....மேலும் நிருலாஸ் இருந்த பிரான்ச் வசந்த் விகார் எனும் மேல தட்டு மக்கள் வசிக்கும் பகுதி..கூட்டம் சும்மா...அள்ளிக்கொண்டு வரும்...வார இறுதி நாட்கள் என்றால் கேட்கவே வேண்டாம்....!!!
எழுதிய டிகிரி..என்னவாயிற்று..? பாசா.. பெயிலா..!!? எத்தனை பேப்பர் அரியர் என்று தெரியாத நிலையில், ஆங்கிலம்...மை நேம் ஈஸ்.....என்று மட்டுமே , சொற்ப அளவில் அறிந்த, ஹிந்தி சுத்தமாக தெரியாத..21 வயது கிராமத்து இளைஞனாக அந்த வேலை...குருவி தலையில் பனங்காயை அல்ல..பனை மரத்தையே வைத்தது போல இருந்தது...!!
கூட்டத்தை கண்டால் கைகால் உதறும்...என்ன கேட்கிறார்கள் என்றே தெரியாது....பில்லுக்கு ஒரு மெசின்....அதில் உணவுக்கான கோடுகளை நினைவில் வைத்திருக்க வேண்டும்...அடிக்கடி சிக்கல் செய்யும் மெசினால், கார்பன் மாட்டிக் கொண்டு.. அந்த சமயத்தில் கைகளால் பில் போட வேண்டும்..!! எதிரே பணக்கார திமிருடன் கோட் சூட் அணிந்து...லேட்டானால் உச்சு கொட்டியே.. ஆளை மிரட்டும் கூட்டம்...என தாறு மாறாக...பிரேக் இல்லாத லாரி போல ஒவ்வொரு நாளும் நரகமாக போய்க் கொண்டிருந்தது..!!ஒவ்வொரு நாளும் சுமார் பத்தாயிரம் போல கல்லா கட்டும்..1988களில் அது பெரிய தொகையாக தெரியும்..பணத்தை பார்த்தாலே கடுப்பாக வரும்..!!??
இவ்வளவு பிரச்சினையில் வேலை பார்த்தாலும்...பிரச்சினை வேறு வடிவத்தில் இருந்தது...!!தினசரி கலெக்சன் தொகையை அப்படியே எண்ணி, அதனுடன் பில்லிங் மெசினில் பதிவான பேப்பர் ரோலையும், மேனேஜரிடம் கொடுத்து விட வேண்டும்...!! பின்பு ஒரு வாரம் கழித்து...தலைமையிடத்து கணக்கரிடம் இருந்து தகவல் வரும்.....இந்த நாளில் இந்த கிழமையில் 1000 ரூபாய் குறைந்தது என்று...??!!?? அது எந்த நாள் ஏன் குறைந்தது என்று நமது சிற்றரறிவுக்கு எட்டாது...!! நினைவிலும் இருக்காது...!!
சிம்பிளாக சொன்னால்......மாதம் ரூ 3000 சம்பளம், ஆனால் தினசரி ரூ 100 பிடித்து கொள்வார்கள் என்பது போன்ற கதைதான்....!!!
ஆகா.....அடுத்த இண்டர்வியூக்கு தயாராகி விட வேண்டியது தான் என முடிவு செய்தாயிற்று...!! இதற்கு இடையில்... நிருலாஸ் என்பது ஐஸ் கீரிம்களுக்கு புகழ் பெற்ற சொந்த தயாரிப்பு பேக்டரியை கொண்ட, பன்னாட்டு தரத்திலான
ரெஸ்ட்டாரண்ட்..டெல்லியின் புகழ் பெற்ற உணவு விடுதி..!!அப்போதே பல கிளைகளும் அதற்கு உண்டு...!! வகை வகையான குளிர் பானங்களுக்கும் புகழ் பெற்றது....ஆல் அமெரிக்கன் பனானா ஸ்பிலிட் என்பது இப்போதும் நினைவில் உள்ள ஒரு பெயர்..!!!
( பை த பை நான் இவற்றில் எதையும் சுவைத்தது இல்லை....!! ஊழியர்களுக்கு என காய்ந்த ரொட்டியும்.. தாலும் வாரத்தில் ஒரு நால் இறைச்சி குழம்பும்..வேனில் வரும்..அதை போய் சாப்பிட்டு வர வேண்டியதுதான்...) கேசியாரான நான் சாப்பிட போகும் போது... கல்லா பெட்டியில் இருந்து எவன் பணத்தை எடுப்பான் என்று தெரியாது...மேனேஜர் உப மேனேஜர் உட்பட....!!! மேலும் நான் சாப்பிட போகும் போது அனைத்து தீர்ந்திருக்கும்......அங்கிருக்கும் வாட்ச் மேன் மட்டும் எனக்கு ஆதரவாக ..ஆல் கன்னிங்க் பெல்லோஸ்..கேர் ஃபுல் என்று அடிக்கடி கூறுவார்.!!
ஒரு சமயம்..சின்ன ஐஸ் கீரிமுக்கு பதிலாக... கோடு எண்ணை.. மாற்றி போட்டு... என்னுடைய தவறினால்... ஒரு கிலோ ஐஸ் கீரிமாக, ஜம்மென்று கொண்டு சென்ற ஒரு பெண்..அதே நினைவுடன், நப்பாசையில் ஆவலில்...அது போலவே மீண்டும் ஏமாறுவேன்..!! என...தினமும் வந்து... வாங்கி...காசுக்கேற்ற சிறிய ஐஸ் கீரிம்... என்றவுடன் என்னை பார்த்து முறைத்துக் கொண்டே சென்ற சம்பவங்களும் உண்டு..!!
மீண்டும் தொடர்வோம்..........பின்...!!
நாக.பன்னீர்செல்வம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக