சமீபத்தில், 2016 செப்டம்பர் மாதத்தில்..புது டெல்லிக்கு அலுவலக மீட்டிங்க் விசயமாக சென்றிருந்தேன்.. வேலை முடிந்து, கடைசி தினத்தில் இரவு தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் பிடிக்க நேரம் இருந்ததால், எனது நண்பரை காண மால்வியா நகர் சென்றிருந்தேன்...
அவரது அலுவலகம், தரை தளத்துக்கு கீழே பேஸ்மெண்டில் இருந்தது..அது தெரியாமல், மேலே உள்ள முதல் மாடிக்கு சென்றுவிட்டேன்.. அங்கு ஏதோ ஆட்கள் தேர்வுக்கான இண்டர்வியூக்கான முஸ்தீபுகள் நடந்த வண்ணம் இருந்தது.... நான் சென்றவுடன், என்னை பார்த்து அங்கிருந்த பணியாளர்..."வாருங்கள் உட்காருங்கள், இண்டர்வியூக்கு தானே".??!?? என்றார்..!!
நை.. நை..!!!.என்றபடி.. தலை தெறிக்க கீழே ஒடி வந்து விட்டேன்...!! அதற்கு காரணமும் இருந்தது...சுமார் 50 வயதாகும் எனக்கு..எனது 21 வயதுகளில்..வேலை தேடும் படலத்தில் முதல் வாழ்க்கைப்பட்ட பூமியாக டெல்லியே இருந்தது.....!!நேரு பிலேசின் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்கள், வாக்கின் இண்டர்வியூ எனப்படும் அவ்வப்போது.. நாளிதழை பார்த்து,,, செல்வது... உள் பட எனக்கு எல்லாம் அத்துபடி...!!
1988களில் டெல்லியின் வேலை வாய்ப்பு அபரிதமானதாக இருந்தது......குறிப்பாக தென்னிந்தியர்களுக்கு...அந்த காலக் கட்டத்தில் அரசு தேர்வு எழுதி பாஸ்..செய்து அதன் மூலம் வேலை வாய்ப்பு பெற்றவர்களை தவிர்த்து....இதர தனியார் பணிகளை நம்பியும்...என்னை போல..வெறும் டிகிரி டிப்ளோமாவை வைத்துக் கொண்டு வேலை தேடி, இந்தி தெரியாமல் வந்தவர்கள் அனேகம்..!!(அதிலும் நான் டிகிரி எழுதிவிட்டு..ரிசல்ட் வருவதற்குள் டெல்லி சென்றவன்...!!)
முனிர்க்கா, ஆர் கே புரம் பகுதிகளின் இவ்வாறனவர்கள் அதிகம் வாழ்ந்து வந்தோம்......அவ்வப்போது ஆரம்பிக்கும் மெஸ்ஸில் தான் இரவில் அனைவரும் கலந்து..புதிதாக வந்தவர்களுக்குரிய வேலை வாய்ப்புகள் பற்றி தெரிவிப்போம்..இதில் பாலு மெஸ், முத்து மெஸ் போன்றவை பிரபலமானவை..!!
அவ்வாறு கிடைத்த தகவல்களில், நல்ல நல்ல வேலைகளில் செட்டிலாகியும், வியாபார வாய்ப்பினை பெற்று, பிசினஸ்மேன் களாக இன்றும் பலர் வாழ்ந்து வருகின்றனர்...!! ஒரு சிலர் தமிழ்னாட்டுக்கு டிரான்ஸ்பர் பெற்றும் கூட வந்து விட்டனர்..!!
இண்டர்வியூக்களுக்கு செல்லும் போது, இடத்தை கண்டுபிடித்து, மொழி தெரியாமல், பொது பஸ்களில் பயணித்து, அப்போது கைப்பேசியும் கிடையாது..!! மரண அவஸ்தையாக இருக்கும்..பனி...வெய்யில்.. காலங்களில் இன்னும் நிலைமை மோசமாக இருக்கும்..!! வழி கேட்டால்.. ஒரு சிலர் அதி மேதாவித்தனத்துடன் எங்கோ இல்லாத இடத்தை..காட்டி அலைவது ஆத்திரமாக வரும்..!!
ஒரு நீண்ட சாலையில், கதவு எண்ணைக் கொண்டு, தேடும் முகவரியை கண்டு பிடிக்க....தலை கீழாக ஆரம்பித்து.... நீண்ட தூரம் நடந்து... புறப்பட்ட இடத்தின் மறுபக்கத்தில் அருகாமையிலேயே நாம் தேடிய முகவரி இருக்கும்...!! களைப்புடன் அசட்டு சிரிப்பும் ஆயாசமும் கலந்து வரும்...!! என்ன செய்வது வேலை வேண்டுமே....சம்பாதிக்க வேண்டும்... பணம் ஊருக்கு அனுப்ப வேண்டும்...பிள்ளையார் சுழி போட்டு இன்லான்ட் லெட்டரில் குடும்பத்திற்கு கடிதம் எழுத வேண்டுமே...!?!!
எந்த வேலை...எங்கே பணி என்று கூட தெரியாமல், ஒரு சில இண்டர்வியுக்கள் என்னால் கலந்து கொள்ளப்பட்டிருக்கின்றன..!! அதாவது அசாமில் பள்ளியில் வேலை.... காஷ்மீரில் இந்திய பாகிஸ்த்தான் பார்டர் வேலைகளுக்கும் நான் முயற்சி செய்து, நான் தமிழ் நாட்டிலிருந்து,. குடும்பத்தில் ஒரு பிள்ளையாக வந்தது...ஹிந்தி சுத்தமாக தெரியாதது.. இவற்றை வைத்து என்னை நாசுக்காக பாவப் பட்டு கழட்டி விட்டு விடுவார்கள்..!!
அப்படித்தான்... எனக்கு டெல்லியின் புகழ் மிக்க நிருலாஸ் ரெஸ்ட்ராண்டில் கேஷியாராக வேலை கிடைத்தது..!!ஏற்கெனவே அதில் வேலை பார்த்த ஒருவர், அதிலிருந்து 5 ஸ்டார் ஓட்டலுக்கு அதிக சம்பளத்தில் செல்ல, என்னை தான் பார்த்துவந்த வேலையில் பிடித்து கொடுத்துவிட்டு சென்று விட்டார்....!!
இதில் என்ன என்ன பிரச்சனைகள்...இதிலிருந்து எப்படி தப்பித்தேன்...பின்னர் எப்படி ஒரு நிரந்தர வேலையை...கரணகுட்டிகரணம் போட்டு பெற்றேன்..என்பதை பின்னர் எழுதுகிறேன்.......
நாக.பன்னீர் செல்வம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக