
தாழ்த்தப்பட்டவர்களை தலித் என்று அழைக்கலாமா..?? கூடாதா..?? என்ற நட்சத்திர பட்டி மன்றம் நடக்கும் இந்த வேளையில்.. இந்த படத்தில் இருக்கும் பிரித்தி எனும் 6 வயது தலித் சிறுமி பார்க்கும் பார்வைக்கு யார்..என்ன.. பதில் சொல்ல முடியும் என்று தெரியவில்லை..?
சென்ற அக்டோபர் 15 ந்தேதி ஞாயிறு கிழமை நம்மில் பலர்... தீபாவளிக்கு முன்னதான விடுமுறை நாள் என்பதால்..பண்டிகை கால பர்ச்சேஸுக்காக.. மெனக்கெட்டு கொண்டிருந்திருப்போம்..
அதே நாளில்... உத்திரபிரதேச மாநில..கேத்தல்பூர் பன்சாலி என்ற இடத்தில்..சாவித்திரி எனும் கர்ப்பிணி தலித் பெண்..காலை 9 மணியளவில் வழக்கமான தனது பகுதியில் குப்பை அள்ளும் பணியை மேற்கொண்டிருந்தார்.. தான் வைத்திருந்த குப்பை அள்ளும் வாளியை..அங்கு சென்ற ஒரு ரிக்ஷா..லேசாக தட்டி..இடித்து விட அது தவறி...
அவ்வழியே சென்று கொண்டிருந்த அஞ்சு என்னும்..தாக்கூர் மேல் சாதி பெண்மணியை தொட்டுவிட..ஆச்சாரம் அனாச்சாரம் ஆகி விட்ட வெறுப்பில்..ரோகித் என்ற தனது மகனுடன் சேர்ந்து கொண்டு...இருவரும் சாவித்திரியை..கடுமையாக தாக்க ஆரம்பித்திருக்கி|றார்கள்..?!?
சம்பவத்தை அறிந்த அவரது கணவர்..மனைவி இருந்த இடத்திற்கு விரைந்த போது..9 வயதான அவரின் மூத்த மகள் மணிசாவும் மனைவியின் தோழி கவுசமும்..சாவித்திரி அடிபடுவதை தடுக்க முடியாமல் பார்த்து கொண்டிருக்க..ஒரு வழியாக..அடித்தவர்கள் கை சோர்ந்து விலகியவுடன்..அடிபட்டவரை...காப்பாற்றி அழைத்து சென்றிருக்கிறார்கள்..
பாதிக்கப் பட்ட சாவித்திரிக்கு..தலையிலும், வயிற்றிலும் கடுமையாக அடிபட்ட நிலையில்..அவரது கணவரான தீலிப் குமார் அருகாமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்.. இரத்த போக்கு தலைகாயம் எதுவும் வெளிப்படையாக ..காணப்படாததால்.. அங்கும் அனுமதி மறுக்கப் பட்டு..மருத்துவர்களின் அலட்சியத்தால் வெளியேற்றப் பட்டு.. வீட்டிற்கு சென்றிருக்கிறார்..
தொடர்ந்து தலை மற்றும் வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்த சாவித்திரி... தனது வயிற்றில் இருந்த ஆண்மகவுடன் தானும் ..சேர்ந்து.. இருவரும்..இந்த தாழ்த்தப் பட்ட தேசத்தில் இருக்க வேண்டாம் என்ற நினைப்பிலோ என்னவோ..மரித்து போயினர்...!?!
இறந்த சாவித்திரி..அவரது கணவர் திலீப்புக்கு இரண்டாவது மனைவி..மூத்த மனைவி மலேரியா காய்ச்சலில் இறந்த நிலையில்..இறந்த முதல் மனைவியின் இரண்டு பெண் குழந்தைகளுக்கும்..பாசம் மிகுந்த தாயாக சாவித்திரி இருந்துள்ளார்.. பிறக்க இருந்த ஆண் மகவும்.. மனைவியும் இறந்த நிலையில் செய்வதறியாது....இரண்டு பெண் குழந்தைகளுடன்.. திகைத்து நிற்கிறார்..?!?..தினம் ரூ 200 மட்டுமே சம்பாதிக்கும்...கட்டிட தினக்கூலி தொழிலாளியான தீலீப்....?
பின்னர் காவல் நிலைய புகார்..விசாரணை என்ற நிலையில் குற்றம் இழைத்தவர்கள் தலைமறைவாகி விட்டனர்..! மூன்று மாடி கட்டிட வீட்டில் குற்றம் இழைத்த உயர் சாதி குடும்பத்தில் இருக்கும்.. ஒரே நபர்..வாழாமல் புகுந்த இடத்தில் இருந்து வந்திருக்கும்..சாவித்திரியின் இறப்புக்கு காரணமான அஞ்சுவின் பெண்.. !
அவர் விசாரணையின் போது கூறிய காரணம்.. காணாமல் போன தனது வீட்டு வாளியை..சாவித்திரி திருடி வைத்திருந்தார் என்றும்.. அதனாலேயே தனது தாய் அடித்ததாகவும்..தலித்..தாக்கூர் சாதி பிரச்சினை இங்கு சாதாரணம்..என்றும்..இதனை தேவையில்லாமல் பெரிது படுத்தி விட்டார்கள் என்பதாக இருக்கிறது..!?! அதாவது ஹிந்தியில்..அவரது மொழியில் கூறினால்.. ”தோடா பகுத் ஹல்லா..ஹோத்தா..ரகத்தாகே”.....?!? தட்ஸ் ஆல்..?!
அது சரி....ஒரு பெண்..அதுவும் தலித்தாக.. பிறந்து..பூமியை பார்க்காமலே.. வயிற்றிலேயே இருக்கும் ஆண்மகவுடன்....மற்றும்...தன்னை நம்பி இருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் கணவரை விட்டு விட்டு இறந்து போவது..கேவலமான...இந்திய சாதி பாரம்பரிய.. பெருமைக்கு முன் பெரிய விஷயமா..?..என்ன??!?
மேலே இந்த படத்தில் இருக்கும் பிரித்தீ எனும் 6 வயது பெண் குழந்தை.. நடந்த எதையும் நம்ப விருப்பம் இல்லாமல்..சற்று மனம் பிறழ்ந்த நிலையில்.. தனது வீட்டில்..இருக்கும் தட்டு முட்டு சாமான்களோடும்..தனக்கு தானே பேசி கொண்டும்.. விளையாடி வருகிறது..! ‘ அம்மா..வேலைக்கு தான்.. போயிருக்கு சீக்கிரம் வந்துடுவாங்க..” என்ற படி..???
பீரித்தி என்ற வார்த்தைக்கு.. வடமொழியில் சந்தோஷம் என்றும் பொருள் படும்....பீரித்தி ஹோமம் என்று கூட ஒன்று உண்டு...என்று கேள்வி..?!? பாவம் இது அந்த..பெயரை தாங்கிய.. தலித் குழந்தைக்கும்...அந்த பெயரை குழந்தைக்கு வைத்தவருக்கும்.. தெரியுமா என்று தான்.. தெரியவில்லை..?
நாக.பன்னீர் செல்வம்...Naga.Panneer Selvam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக