
ஒரு பேருந்து விபத்து..அதன் கோரத்தை இரு வேறு கதாபாத்திரங்களின் மூலம் காதலை அடிப்படையாக கொண்டு..”எங்கேயும் எப்போதும்” என ஒரு தமிழ் திரைப்படம் வந்திருந்ததை நாம் அறிந்திருப்போம்..! திரைப்படம் முடிந்து விடுகிறது..!..ஆனால்..விபத்தும் அதன் தாக்கமும், அதன் பிண்ணணியில் உள்ள குடும்ப நிகழ்வுகளும் அப்படி முடிந்து விடுகிறதா..? என்றால் ஒரு நாளும் இல்லை..!
விபத்து..அது ஏற்படுத்திய பாதிப்பு..ஊனம்..பிரியமானவர்களின், முக்கியமானவர்களின் இறப்பு.. உறவு இழப்பு...நினைவு. அச்சம்.. வாழ்க்கை முறை மாற்றம், அனுதாபம் போன்றவை ஈரவைக்கோல் புகையாக சம்பந்தப் பட்டவர் மனதில் எழும்பி துயரத்தையும்.. நினைவு சுமையையும்.. பாரத்தையும் ஏற்படுத்தி..விபத்திற்கு முந்தைய..அதற்கு பிந்தைய வாழ்க்கை என இரு கூறுகளாக வகைப் படுத்தி,கண்ணீர் மல்க வைக்கிறது என்பதே கசப்பான உண்மை..!?!
ஒல்லியான..சராசரி உயரத்துடன் சவலைப் பிள்ளையின் தேகம்..ஒரு காலை விந்தி விந்தி நடை...அந்த பெண்ணுடன் அவரின் ஒரு மகனும், மகளும் தோள் அளவுக்கு வளந்தவர்கள்..இவர்களுடன் ஒரு வயதான பெண்மணி..குழந்தைகளின் பாட்டி..அந்த பெண்ணின் மாமியார்..
அனுதாபமும்..சுய பச்சாதாபத்துடன்..கவலையுடனும்.. எதிர்பார்ப்புடன் அந்த நீதிமன்ற லோக் அதாலத் நிகழ்வில் இருந்த இந்த நால்வரின் வாழ்க்கை ஒரு வருட காலத்திற்கு முன்பு வேறு மாதிரி இருந்திக்கும்..
உள்ளூர் ஊராட்சியின் மன்றத்தலைவியாக பணியாற்றிய பெண்..அவருக்கு பிண்ணனியில் அரசியில் ஈடுபாடு கொண்ட கணவர்..இரு குழந்தைகள் வயதான தாயார் என....மகிழ்வுடன் இருந்த குடும்பமாகத்தான் அதுவும் இருந்திருக்கும்..அந்த விபத்து நடக்கும் வரையில்..!!
கும்பகோணம் காரைக்கால் சாலையில்..ஒரு பெரிய சாலை வளைவில்.. காவல் துறையின் ஜீப் ஒன்று இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மேற் குறிப்பிட்ட குடும்ப்த்தின்... தம்பதியை கடுமையாக மோதி சாய்த்தது..! கணவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட.. மனைவிக்கு காலில் ஊனமாகும் அளவிற்கு காயம்.. இதில் சிறப்பு என்னவென்றால் மோதியது காவல் துறை ஜீப்..அதனை குடித்து விட்டு ஓட்டியவர் சப் இன்ஸ்பெக்டர் பதவியில் உள்ள அரசு அதிகாரி..வண்டி ஓட்ட தெரியாதவரும் அதற்கு லைசென்ஸ் எதுவும் பெற்றிருக்காதவரும் ஆவார்..!
இதன் தொடர்ச்சி...மருத்துவ சிகிச்சை..காவல் நிலைய புகார்..பதிவு..இட மாற்றம்..வழக்கு.. நீதிமன்றம், இன்சுயுரன்ஸ் கம்பெனி இத்யாதி இத்யாதி என நீண்டு.. லோக் அதாலத்தில் சமரசம் கண்டு இழப்பீடு பெற அந்த பாதிக்கப் பட்ட குடுமபம்..பெறும் தொகைக்காக காத்திருக்கிறது..அதுவும் அதிகாரிகள் நீதிமன்ற பொறுப்பாளர்கள் மனது வைத்து..ஏலம் போட்டு.. பரிதாபத்துடன் கொடுக்கும் தொகை..இழப்பீட்டுக்காக...?!??
ஒரு விபத்து ஏற்ப்பட்டு..வழக்கு பதிவாகி, சிகிச்சை பெறும் நிலையிலேயே.. பல்வேறு தனித் தனி மருத்துவ அறிக்கை..உண்மையான செலவினங்களை சம்பந்தபட்ட இன்சுயுரண்ஸ் நிறுவனங்கள் கொடுத்து வழக்கை முடித்தால் என்ன..?? இதை விடுத்து நீண்ட காலம்.. நீதிமன்ற செயல் பாடுகளின் வழியே நடைமுறையில் இருக்கும் இந்த முறை..மிகுந்த மனச்சோர்வை தருகிறது..!
வக்கீல்களின் பீஸ் குறிப்பிட்ட தொகையாக இல்லாமல்.. அது பெறும் நிவாரணத்தில் கணிசமான பங்கு என்ற அளவில் முடிந்து..இடையில் பல் வேறு குடும்ப உறவுகளும் இந்த பணத்தை..பங்கை எதிர்பார்த்து..சிக்கலில் முடிந்து பாதிக்கப் பட்டவருக்கு உண்மையான தீர்வும் நிவாரணமும் கிடைக்காமலேயே போய்விடுகின்றன..!!?!!
ஒரு சில வருடங்களுக்கு முன் கல்லூரி வாசலில் விபத்தில் சிக்கிய தனது மகனின் சிகிச்சை, தலை ஆபரேசன், முக ,பல் சீரமைப்பு என பல கட்டங்களாக நிலுவையில் இருக்க,அதனை பற்றிய கவலையும் புரிதலும் இன்றி.. அவனின் தந்தையோ கிடைக்கும் தொகை தனது குடும்ப கடனுக்கு போதுமானதாக இருக்குமா..?? என்று தனியே சென்று மனைவியிடம் போன் செய்து சம்மதம் கேட்டு...சார்...கிடைக்கும் இந்த தொகை எனது குடும்ப கடனுக்கே போதாது சார்..என..புலம்பி..மகனின் சிகிச்சையை புறந்தள்ளிக் கொண்டிருந்தார்..!!
கிடைக்கும் இந்த தொகையில் தனது கணிசமான கமிசன் எவ்வளவு..? அதனை எவ்வாறு பெறுவது..? என கவலையில் ஆழ்ந்து....திக்கி திணறி பேசும் வக்கீல் என..!!?!!, ஒரு விபத்து முடிந்த நீண்டகால நிகழ்வில் அதன் முக்கியத்துவம்.. பாதிப்பை இழந்து பல் வேறு பரிணாமங்களுடம் கிடைக்கும் தொகையே பிரதானமாக..கமிசன்..கடன்.பங்கு பாகம்...வேறு இதர..குடும்ப செலவீனங்கள் என நீண்டு பாதிப்படைந்தவர் இரண்டாம்...மூன்றாம் ஏன் நான்காம் பட்சமாக தள்ளப் படும் நிலைக்கு ஆளாகும் பரிதாப நிலை இயல்பாய் தோன்றிவிடுகிறது..??!!
விபத்தில் பாதிப்பட்ட அந்த இளைஞன்.. தனது செயற்கை பல் செட்டை..கழட்டி..மிகுந்த கூச்சத்துடன் நீதிபதிகளிடம் காட்டி..மற்ற தலைகாயம் மெடிக்கல் ரிப்போர்ட்களையும் அளித்து..பெறக்கூடிய இழப்பீடு பற்றிய எந்த வித பிரக்கினையும் இல்லாமல்.சட்டென .வெளியெ சென்று கண்ணீர் மல்க தான் எடுத்த பல் செட்டை ..யாரும் அறியா வண்னம் அவசரம் அவசரமாக பொருத்திக் கொண்டிருந்தது..இதயத்தை என்னவோ செய்தது..??
கணவனையும், காலையும் கூடவே வாழ்க்கையும் இழந்த அந்த சவலையான பெண்ணும்..தனது குழந்தைகளை உச்சு கொட்டி.. சத்தம் போடாமல் இருக்க செய்து.. எவ்வளவு தான் சார் தருவாங்க..?? என்ற குசு குசுவென்று இரகசியத்தை அறிய முயலும் ஒரு பள்ளி சிறுமியின் குரலில் கேட்டதும்..,
மகனை இழந்து.. மருமகள், அவரின் இரு குழந்தைகள் என பெரும் பாரத்துடன் .வயதான காலத்தில் நிலை தடுமாறி..கண்ணீர் மல்க..எங்கோ தூரத்தில்..விரக்தியுடன் வெறித்து பார்த்துக் கொண்டிருக்கும் அந்த வயதான பெண்ணும்.... இந்த மக்கள் நீதி மன்றத்தில் மட்டுமல்லாது..இந்தியாவின் அனைத்து நீதி மன்றங்களின்..அவல நிகழ்வுகளுக்கு சாட்சிகளாகவே இருப்பர் என்றே நினைக்கிறேன்..!
விபத்து என்றால் சும்மாவா ?? அது சாலையில் அவசர கதியிலும்.. நீதிமன்றங்களில் மிகுந்த நிதானமாகவும் குரூரமாகவும் நடக்கும்.!! அதனை பார்க்க நமக்குத் தான் தைரியம் இல்லை...!!??!!
நாக.பன்னீர் செல்வம்..Naga.panneer selvam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக