நாட்டு மனிதர்களும்.. நாட்டு மாடுகளும்.!!

நான் ஐந்தாவது வகுப்பு படிக்கும் போது, ஒரு நாள் காலை சுமார் பதினொரு மணியளவில் வகுப்பில் இருந்து சாலையை யதேச்சையாக பார்த்தபோது எனது பெரியம்மாவும், அத்தையும் சென்று கொண்டிருந்தனர்..! அவர்களும் என்னை பார்த்து விட்டனர்..பின் இருவரும் எனது வகுப்புக்கு வந்து முத்து சாரிடம் பர்மிஷன் வாங்கி என்னை வெளியே அழைத்து என்னிடம் கொஞ்ச நேரம் கவலையுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு..பின்னர் சென்று விட்டனர்..
பழைய புடவையுடன், களைப்பாக காணப்பட்ட இருவரும் இரண்டு மூன்று நாட்களாக வீட்டிற்கு செல்லாமல்.. தெரிந்தவர்கள் வீட்டில் தங்கி.. காணாமல் போன மாட்டை தேடிக் கொண்டிருப்பதை என்னிடம் கவலையாக தெரிவித்து சென்றதை..பின்னர் நான் எனது ஆசிரியரிடம் விவரித்தேன்..!
கிராமங்களில் வளர்ப்பு மாடுகள் காணாமல் போவது என்பது கோடைக் காலங்களில் மிக சாதாராணமாக ஒன்று..! ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டங்களில் ஒவ்வொரு வீட்டிலும் பசு மாடுகள், எருமை மாடுகள், உழவு மாடுகள் என்ற வகைக்கு ஒன்றிரண்டு என தவறாமல் இருக்கும்..!
எருமை மாடுகள் நல்ல வெயில் காலத்தில்.. மேய்ப்பவர்..கவனிப்பாரின்றி இருக்கும் வேளையில்.. தலையை தூக்கி.. நாசிகளை கொண்டு தண்ணீர் இருக்கும் திசையை நோக்கி சர சர வென்று போய்க் கொண்டேயிருக்கும்.. !! சமயங்களில் நாம் அவதானிக்க முடியாத கிராமத்தில், தோப்பில் என தொலைவு தூரத்தில் செட்டிலாகியிருக்கும்..!!
காணாமல் போய்..தவறி வந்த... மாட்டை ஒரு சிலர் கட்டி வைத்து, வேண்டா வெறுப்பாக வைக்கோல் தண்ணீர் என்று வைத்து கொண்டிருப்பார்கள்.. நாள் ஆக ஆக அதன் உரிமையாளராக மாறி விடுவர்..! ஆனாலும் இதனை கிராமத்தின் மற்ற நபர்கள் குசு குசு வென்று பொறாமையுடன் பேசி கொண்டுருப்பர்.. ! அதிர்ஷ்டசாலியை பொறாமையால் தானே எதிர் கொள்ள வேண்டும்..! மாட்டுக்கு உரியவர் தேடி வந்து மாட்டு அடையாளம் சொல்லி விட்டால் அவ்வளவுதான்....அவரை மாடு இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்று காண்பித்தால் தான் அவர்களுக்கும் நிம்மதி..!!
காணாமல் போன மாடு..ஒரு சில நாட்களிலும்.. வாரக்கணக்கிலும்..மாத கணக்கிலும் கூட கண்டுபிடிக்க முடியாமல் போய் பின்னர் திரும்ப கிடைக்கும்..!! காணாமல் போன மாட்டை எங்காவது கட்டுத் தளையில் கண்டால் வரும் மகிழ்ச்சி சொல்லி அளவிட முடியாதது..! பின்னர் மாட்டு உரிமையாளரும்..இடைக்கால உரிமையாளரும் பேசி..தீவன செலவுக்கு ஏதாவது பணத்தை கொடுத்து விட்டு.. மாட்டை திரும்ப ஓட்டி வருவர்..! ஒரு சிலர் பாவம் பார்த்து காசு கூட வாங்க மாட்டார்கள்..!
இதற்கிடையில் அதிர்ஷ்டமாக கிடைத்த மாடு... அந்த வீட்டு குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் மிகவும் பிரியமானதாகி, உரிமையாளருக்கு கொடுக்க..பிரிய.. மனமில்லாமல், ஆனாலும் ஒப்படைத்து, பின்வரும் நாட்களில் இரு குடும்பங்களும் மிகுந்த சினேகமாக, உறவாகவே மாறியும் விடும்..!!
காணாமல் போன மாடு கிடைக்கும் வரை அதனை இழந்த குடும்பம் மிகுந்த சோகமாகவே இருக்கும்.. குடும்பத்தினர் நல்ல சோறு தண்ணீர் இன்றி மாட்டின் நினைவாகவே இருந்து அதனை பல்வேறு கிராமங்களிலும் உறவினர்களிடம் அடையாளங்களை சொல்லி.. நாலா திசையிலும் தேடிக் கொண்டே இருப்பர்..!!
ஒரு சில மாடுகள் காணாமல் போய் சென்ற இடத்தில் சினையாகி.. கன்று ஈந்து பின்.. மாட்டின் உரிமையாளுக்கு திரும்ப கிடைக்கப் பெற்ற கதைகளும் உண்டு..! அறுவடை பணிகள் ஆட்களை கொண்டு நடந்த நிலையில்.. அறுவடைக்கு பின்னர் வைக்கோலில் உள்ள நெல்லை பிரித்தெடுக்க..”போரட”.. என்னும் என்னும் முக்கிய செயல் பாட்டுக்கு..அதாவது மாடுகளை பிணைத்து சுற்றி சுற்றி வர..மிதிக்க செய்து..பின் நெல்லையும் வைக்கோலையும் பிரித்து.. உதறி.. எடுக்கும் முறை அது..!
இந்த வகையான நெல் அறுவடைக்கு பிந்தய “போரடி”..... எனும் அத்தியாவசிய வேலைக்கு மாடுகளின் தேவை இன்றியாமையாததாக இருந்தது..!! ஆள் மற்றும் அவருடன் வந்த சோடி மாடுகளுக்கும் சேர்த்து கூலி கொடுக்கும் முறை இருந்தது.. !!மாடுகளை அதன் கழுத்தில் பிணைத்து..வட்டமாக..செக்கு.. போல சுற்றி வர செய்யும் பணிகளில்..பள்ளியில் படிக்கும் வீட்டு சிறுவர்கள் விரும்பி ஈடுபடுவதும் உண்டு..!
அவ்வாறு மாடுகள் சுற்றி வரும்போது...தரையில்..களத்தில் உள்ள வைக்கோலில் சாணம் இட்டு..குளம்புகளில்.. அது மிதி படாமல் இருக்க.. வாலை தூக்கியவுடன்..வைக்கோல் சுருணை தயார் செய்து.. சாணியை கையில் ஏந்தி கேட்ச் பிடிப்பதும் கூடுதலான..விளையாட்டும் வேடிக்கையுமாக அறுவடைகளத்தில் இருந்து கொண்டிருக்கும்.!
நாட்டு மாடுகளின் பால் வளம் மிகவும் குறைவானதே..!!லிட்டர் கணக்கு இல்லாத நிலையில்.. சேர் எனப்படும் உள்ளூர்..குவளை அளவுகளில் தான் வினியோகம் ஆனது..அது எல்லோருக்கும் போதுமானதாகவும் இருந்ததில்லை..! பாலில் சரி சம்மாக தண்ணீர் கலக்கும் வழக்கமும் உண்டு..!
மேலும் வறுமை காரணமாக பாலை மேட்டுக் குடியினருக்கு விற்கும் நிலையும்..பின்னர் டீ கடைக்களுக்கும் விற்க முற்படும் போது..பணத்திற்கு எல்லாப் பாலையும் விற்கவும் ஆசை இருந்தது..!! உதாரணமாக முக்கால் லிட்டர் கறந்தால் அதனை ஒரு லிட்டராக்கி விற்று காசாக்குவதே..ஏழைகளின்.. மாடு வளர்ப்போர்களின் நிலைமை..!
மேலும் நாட்டு மாடுகளில் பால் கறப்பதும் கடினம்..! காம்பு அழுத்தமாக இருக்கும்..! ஆழாக்கு பால் பெற மாடுகளின் உதைகளையும் வாங்க வேண்டியிருக்கும்..! மேலும் ஒருவர் மட்டுமே கறந்து பழக்கப் பட்ட மாடுகள் எனில் மற்றவரை..அன்னியரை கறக்க அனுமதிக்காது..!! மீறினால்..கடைக் கண் பார்வையால் பார்த்து.... உதை தான்..! பல்லு போய்விடும்..!! பாலை தொடர்ந்து பெண்கள் கறந்த வீட்டில்.. அவர்கள் இல்லாத போது..ஆண்கள்.. பெண்களின் புடவையை அணிந்து திருட்டுத் தனமாக.. சொந்த மாட்டில்.. அது கவனிக்காவண்ணம்..பயந்து பயந்து கறந்த கதைகளையும் கேட்டிருக்கிறேன்..!!
பின்னர் தான் வெளி நாட்டு இரகங்கள் கால் நடைத்துறை மூலம் பரவியது..!! சினை ஊசி மூலம்..ஜெர்சி, பிரிஸ்டன் எனும் இரகங்கள் எல்லா கிராமங்களுக்கும் பரவி பால் உற்பத்தி அதிகமானது..!! காளை மாடுகள் மூலம் இனவிருத்தி செய்யும் முறை வெகுவாக குறைந்தது..!! காரணம் வெட்டை எனும் நோய் வந்தால் பசு மாடுகள் அவ்வளவு தான்..! தேறுவதற்கு பிரம்ம பிரயத்தனம்... வைத்தியம் பார்த்தாக வேண்டும்..!!சினையும் பிடிக்காது..!
வெண்மை புரட்சிக்கும்.. பால் பற்றாகுறை நீங்கவும்..கலப்பின இரகங்கள் முக்கிய பங்கு வகித்தன..!! அதிகமாக டீ.. காப்பி குடிக்கும் பழக்கமும் உண்டானது..! எனது தாத்தா. இரவு நெடு நேரம் வரை தூக்கம் இல்லாமல் தவிக்கும் போது..தான் மதியம் சுமார் 4 மணியளவில் குடித்த டீயையோ.. காப்பியையோ காரணமாக கூறியது இன்றளவும் ஆச்சரியமான விசயமாகவே இருக்கிறது..!! மனிதர்கள் அவ்வளவு சென்சிட்டிவாக..உடலும்.. மனமும் தூய்மையாக இருந்தது..இன்று நிச்சயம் சாத்தியமில்லை..!!
பின்னர் தான் மாடுகளை ஒரு சிலர் சினை பிடிக்காத நிலையிலும் கரிசனமாக..ஏன்.காளை கன்றுகளையும் கூட தேடித் தேடி வாங்கினர்..!! இவ்வளவு நல்லவர்களாக அவர்கள் இருப்பது ஆச்சரியமாக இருக்கும்..!! பின்னர்..அது பல வருடங்களுக்கு பிறகே.. அவ்வாறான மாடுகள்..மாட்டிறைச்சிக்காக வாங்கப் பட்டது என்பது எங்களுக்கு தெரியவந்தது..!! அதற்குள் கிராமத்தில் பாதி மாடுகள் காலியானது..!!
பின்னர், காணாமல் போன மாடுகளை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகும் தேடும் நம்பிக்கை இழந்து..அதுபோனதில் சேத்தி..!என கைவிடும் நிலை ஏற்பட்டது....!!அவ்வாறான மாடுகள் அடி மாட்டிற்கு சென்றிருக்கும் என்ற நிலையில்..அதனை தொடர்ந்து தேடும் நிலையில் அவ நம்பிக்கை உண்டாகி..காணாமல் போன மாடுகள் எங்கோ ஒரு சம்சாரியிடம் இருக்கும் என்ற அது திரும்ப கிடைக்கும் என்ற நிலை..ஆழமான நம்பிக்கை இற்று போய்...அது இன்னேரம் எந்த அடிமாட்டிற்கு போனதோ..! என்று மருகும் நிலையும் விவசாயிகளுக்கு உண்டானது..!!
ஒரு..முறைக்கு..இரு முறை..மாடுகளை சினை படுத்த முயற்சி செய்து..அது பலனளிக்காதபோது.. மீண்டும் அதற்கான முயற்சிகள்.. கால் நடை மருத்துவம், நாட்டு வைத்தியம் என கைகொள்ளாமல்.பாரம்பரிய முயற்சிகளை மறந்தும்..மனமில்லாமலும்..தேவையும் இன்றி.. கைவிட்டு...சோம்பேறிகளாக விவசாயிகள் மாறி.. மிக சுலபமாக அடிமாட்டிற்கு..மாடுகளை விற்கும் பழக்கத்தை தொடங்கினர்..!
எங்கள் கிராமத் தலையாரி, நான் சிறுவனாக இருந்த போது சிரித்துக் கொண்டே கூறுவார்..” தெரு..கோவிலில் விளக்கு எரிந்தால் யார் வீட்டு மாடோ நோய் வாய் பட்டிருக்கிறது” என்று. அர்த்தம் என...!! அதே போல் மாடு இறந்து விட்டால்.. சாமிக்கு வேண்டிக் கொண்ட பெண்கள்.. ஆத்தாமார்கள்..அது நிறைவேறாத நிலையில் நேரே..கோயிலுக்கு வந்து.. சாமியை திட்டித் தீர்த்ததையும்...உனக்கு கண் இல்லையா..!! விளக்கு ஒரு கேடு..!! என ஏதோ ஆள் நேரில் நிற்பது போல் மண் வாரி தூற்றி சபித்தும் செல்வார்கள்..!!
இதற்கிடையில் நாட்டு மாட்டிற்கும்.. வெளி நாட்டு இனங்களுக்கும் இடையில் பிறந்த கிராஸ் எனும் புதிய இரகம் பசுவில் உருவானது.. !திமில் என எதுவும் இல்லாமல் கழுத்து முதல் உடல் வரை மட்டமாக இருக்கும் வகை சாதுவான..சூழலுக்கு ஏற்ற..புதிய வகை....! எருமை மாடுகளில் முரா எனும் சுருட்டை இரகம்.. வேற்று மாநிலத்தின் மாடு வகை..1970களில் தமிழ் நாட்டில் பிரபலமான காலமும் அது..தான்..!
நாட்டு எருமை எனில் கொம்பு மிக நீளமாக இருக்கும்..கொம்புகளுக்கு ஏற்ப ஒவ்வொரு மாட்டுக்கும் ஒரு பெயர் உண்டு..!! வீணை..முன் கொம்பு.. பின்மட்டை என தனித்தனி பெயர்கள் உண்டு..! ஓவ்வொரு மாட்டின் தாய்.. பாட்டி. பேத்தி என தனித்தனியாக..அதன் குடும்ப வழிகளை நினைவு வைத்து குடும்ப உறுப்பினர்களை போலவே மாடுகளையும்..தொடர்பு அறுந்து போகாமல் வளர்த்து.. உறவாகவே எண்ணி.. பாரட்டி..சீராட்டி வந்த காலமும் ஒன்று உண்டு...!?!
சாதாரண் நாட்டு எருமைகளை..சிறிய கன்று குட்டிகளாக இருக்கும் போது அவற்றை குளத்தில் குளிபாட்டும் போது.. விளக்கெண்ணெய் கொண்டு கொம்பில் தடவி ..தேய்த்து..தொடர்ந்து அதனை நீவி..சுருட்டி விட்டால்..கொம்பு சுருண்டு.. பின்..அவை சுருட்டை மாடாகி விடும் என்ற க|ற்பனை அளவில் தான்..சிறுவர்களான..நாங்கள் வில்லேஜ் விஞ்ஞான அறிவுடையவர்களாக இருந்தோம்..!!
மாடுகளை குறிப்பிட்டால்..கிராமத்து தரகர்களை பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது..! மாடுகளில் விலையை சூசகமாக மாற்று பெயர்களில் குறிப்பிடுவது.. ”லிங்கம்.மான்”..என மாட்டின் விலையை வளர்த்தவருக்கு தெரியாமல்...மறைமுகமாக..இரகசியமாக..விலையை தங்களுக்குள் பரிமாறிக் கொள்வது..”அகா சுகா..பொய்..பித்தாலட்டம்”.. என தனித் தனி திறமைகளோடு.. இராஜா மகாரஜாக்களாக கிராமங்களில் வலம் வந்தனர்...!!
எனது தாத்தா...அந்த நாளைய ஒரு தரகரை பற்றிக் குறிப்பிடும்போது.. தரகர் தன் மனைவியை..தானே மாடு வாங்க..அழைத்து சென்று.. அவரின் தாலியை கழட்டி மறைத்து வைத்து..மனைவியை..யாரோ ஒரு அப்பவி பெண்ணாக சித்தரித்து..ஒரு அய்யர் வீட்டு பசு மாட்டை குறைவான விலையில் வாங்க..””அய்யா.. ”இவ பொம்மனாட்டியிலு கம்மனாட்டி..!! பாவம்...கணவனை இழந்தவள்”....! விலையை குறைத்து..புண்ணியத்தை தேடி கொள்ளுங்கள்..!” என்று பரிதாபமாக..கெஞ்சி..கட்டிய மனைவியையே கைம்பெண்ணாக்கி..! மாடு வாங்கி.தரகு தொழிலை சிறப்பாக மேற்கொண்டதை கூறுவார்..!!
அப்புறம்.. !அப்புறம்.........!!!.தயங்கித் தான் எழுத வேண்டியிருக்கிறது.......!!ஜல்லிக் கட்டு எனபது அனைத்து பகுதிகளுக்கு சொந்தமானதோ பழக்கமானதோ அல்ல..!! ஒட்டு மொத்த தமிழனத்தின் அடையாளமாக இதனை கைக் கொள்ளமுடியாது..!!ஊடகங்கள்..செய்தி தாள்களின் வருகையின் பின்னரே.. ஜல்லிக் கட்டை பலரும் எங்கள் பகுதியில் அறிந்திருந்தோம்..!! இன்றளவிலும்.. அதனை நேரில் கண்டிராத வெகு ஜன தமிழக கிராம மக்களும் உண்டு..! ஒவ்வொரு கிராமமும் மாட்டுப் பொங்கலை கொண்டாடும் முறையில்..குறிப்பிட்ட பகுதியினர் கொண்டாடும் முறை..ஜல்லிக் கட்டு அவ்வளவே..!!
ஜல்லிக் கட்டின் பின்புலத்தில் உள்ள சாதி, சூதாட்டம், தனி மனித ஆளுமை, வர்க்க பேதம், மரணம், மாடு பிடி வீரர்களின் இறுதி நிலை, நிரந்தர ஊனம், மாடு பிடி வீரர்களின்குடும்பத்தினர்..மனைவிமார்கள்..குழந்தைகள், மாட்டின் நிலை...இவற்றை எல்லாம் மனதில் கொண்டு, சங்க காலம் கலித்தொகை என பழம் பெருமை பேசிக் கொண்டு அதனை தொடர்வதில் எனக்கு நம்பிக்கையில்லை..!!இன்று குறிப்பிட்ட சாதியினர் ஜல்லிக் கட்டு மாடுகளை வளர்க்க கூடாது..என்ற சாதீய தடைகளும் உண்டு..என்பதே கேவலமான உண்மை..!!
கலித்தொகையில் கூறப் பட்டிருப்பதை போல மாட்டின் கொம்பில்.... சுற்றிய மாடு பிடி வீரனின் குடலை..பருந்து வானில் இருந்து வந்து..கவ்வி செல்லும்..!! என்பது போன்ற.. பயங்கர.. எண்ணிப் பார்க்க பதறும் நிகழ்வுகளை..இதனை எழுதிய புலவர்கள்.. மாட்டை ஒரு நாளும் பிடிக்காத நிலையில்..ஒரு சில பொற்காசுகளுக்காக ;புகழ்ந்தும்..எழுதி இருக்க கூடும்..!!
தாழ்த்தப் பட்ட..பின் தங்கிய.. நிலமற்ற ஏழை கூலி விவசாயிகள் ஒரு நாளும் ஜல்லி கட்டு மாடு வளர்ப்பில் ஈடுபட வாய்ப்பு...இருக்காது..!! எனவே இது சமூக நல்லிணக்கத்தையும் ஒரு நாளும் பறை சாற்றாது..! மாடு பிடிக்கப் படாமல் இருக்க பணம் கொடுத்து..ஜல்லிக் கட்டு முதலாளிகள்..மாட்டின் மதிப்பை அதிகப் படுத்தும் வழக்கும் உண்டென்பதையும்...அதாவது மூன்று முறை பிடி படாத மாட்டின் விலை ஒரு லட்சம் வரை எகிறும்..!! கூறக் கேட்டிருக்கிறேன்..! இதுவெல்லாம் மாண்பு பாரம்பரியம் எனில்..சாரி..?!!??மன்னிக்க..!!
விஞ்ஞானத்தின் துணைக் கொண்டு, நமது பாரம்பரிய.. நாட்டு மாடுகளை மீண்டும் புது வாழ்வு கொள்ள செய்யலாம்.. !! நாட்டு கோழிகள் இன்று புத்துருவாக்கம் செய்ய பட்டிருப்பதை போலவே..!!மேலும் ஜல்லிக் கட்டு காளைகள் பெண் பசுக்களுடன் சேர விடாமல்.. கடுமையான பாது காப்புடன் தனித்து பராமரிப்பதாக.. அதனை வளர்த்தவர்கள் பெருமிதம் கொள்கிறார்கள்..!!
மரபு...பாரம்பரியம்..கலாச்சாரம்..பண்பாடு.. நாகரீகம்..பழக்க வழக்கம்..உரிமை..பெருமை.. எல்லாம் ஒன்றா.. வேறு வேறா..?? ஒற்றை அர்த்தம் உடையதா..?? அல்லது..தனித் தனி அர்த்தம் உடையதா..? என்று எனக்கு தெரியவில்லை..!! தெரிந்தவர்கள் சற்று விளக்குங்குகளேன்...தயவு செய்து தனித் தனியாக........கூட்டமாக அல்லாமல்...!!!!
நாக.பன்னீர் செல்வம்... Naga.Panneer Selvam 09840576353

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக