சமீபத்தில் அதிகம் கேள்விப்படும் ஹார்ட் அட்டாக்குகள் மற்றும் நீரிழிவு நோய்கள் கொஞ்சம் நின்று சிந்திக்க வைக்கின்றன..பள்ளி பருவத்து நண்பர்களுக்கும்..கல்லூரி தோழர்களுக்கும்.. அவை ஒரு சிலருக்கு வருவது வாழ்வியலை கவனித்து தற்காலிகமாக அச்சப்பட்டு பயணிக்க வைக்கிறது..
ஹார் அட்டாக்கை பற்றி இவ்வாறான எண்ணங்கள் இருந்தாலும்.. நீரிழிவு என்னும் டயாபட்டிசை நான் குற்றம் சொல்லுவதில்லை...அது அருமையான.. நீதிபரிபாலனம் செய்யும்.. நீதி நோயாகவே...எனக்கு நம்ப தோன்றுகிறது..!?!
ஆமாம்..ஆரம்ப காலத்தில்..அரசியல்.. சாதி என... அடி.. தடி அட்டூழியம்.. அராஜகம் செய்தவர்கள் சக்கரை நோயால்..குறுகி.. கையில், இஞ்செக்சனுடன் வாக்கிங் சென்று கொண்டு..சாப்பாடு குறித்து என்னேரமும் சிந்தித்து கொண்டு அளந்து அளந்து... தேர்ந்தெடுத்து..சாப்பாட்டை கண்டு அச்சம் கொண்டு.. மருந்து மாத்திரையுடன் அதைவிட.. சதா சர்வ காலம் நோய் குறித்த கவலையுடன்.. அந்த நோயுடன் மனைவிக்கு நிகராக, அன்னியோன்யமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களை கண்டால்..ஆகா கடவுள் இருக்காண்டா குமாரு......என்று துள்ளத்தோன்றும்..!!
அப்புறம், கடவுளும், நீதியும், ஏழைகள் வசாக்கும் செய்யாததை சர்க்கரை நோய்.. இன்சுலின் வகையாறாக்கள் சூப்பரா செய்வதை கண்டால் ஆனந்தம் வரத்தானே செய்யும்...! அதைவிட இத்தகைய அநீதி மான்களை குறித்து.. கூட இருப்பவர்கள் அல்லக்கைகள், எதிரிகள், பார்வையாளர்கள் யாராக இருந்தாலும்.. பேச்சு வழக்கில்..”பாவம் அண்ணணுக்கு சர்க்கரை” என சம்பந்த பட்டவரை நோய் மன்ப்பான்மையுடன் வைத்திருப்பது..அவருக்கு, ”என் பங்கு இந்தா புடிச்சுக்கோ”.... என, மருந்து..கைவைத்தியம்..சிறப்பு மருத்துவர்கள்..இவரை ஒத்த மற்றவர்களுக்கும் சர்க்கரை வியாதி வந்ததை குறித்து எடுத்துரைத்து.. கலங்கடித்து.. நோயாளியை லாக் செய்து எப்போதும் அவரை பரிதாப உணர்ச்சிக்குள் வைத்திருப்பார்கள்....!?
வேண்டாத, வெல்லமுடியாத, எதிரியை பரிதாபம் கொண்டு பார்ப்பதை விட வேறு என்ன பாக்கியம் இந்த உலகத்தில் இருந்து விடமுடியும்..?!?
இதை விட.. டீக்கடையில் டீ போடும் மாஸ்டர்கள் எல்லோரும்..சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவம் படித்தவர்களாகவே எனக்கு தோன்றும்..! பின்னே, நாலைந்து நண்பர்களாக..கும்பலாக.. டீ குடிக்க சென்றால்..அதில் ஒரு சிலரை மட்டும் குறி வைத்து, வம்படியாக, சார் உங்க இரண்டு பேருக்கும்,,, சர்க்கரை போடுனுமா.. வேண்டாமா..இல்ல கம்மியா..?? என டாக்டர்கள் ரேஞ்சுக்கு கேட்பதும்...அப்புறம் அதில் ஓரிருவர், டீ மாஸ்டர் கேட்டது போலவே.. ஆமாம்ப்பா.. எனக்கு சர்க்கரை போடாதே.. அல்லது கம்மி.. என சொல்லி விட்டால் போதும்...ஆகா டீ மாஸ்டருக்கு ஒரு ஆனந்தம்.. திருப்தி வரும்..பாருங்கள்..!? அதை வார்த்தையால் வர்ணிக்க முடியாது..?!
அதன் மறைமுக அர்த்தம்.. “டேய்..எனக்கு தெரியாதா.. உன்னை பத்தி.!.உன்னை பார்த்தாலே தெரியும்டா.! .உனக்கு சர்க்கரை இருக்குண்ணு...யாருகிட்ட..??!!” என்பது போல..என்னிடம் அப்படி யாராவது கேட்டால்.. நல்ல வேளை கேட்டீங்க..!? எனக்கு நல்ல தூக்கலாக... ஜீனி போட்டு கொடுங்கள்.. நாட்டு சக்கரை சமாச்சாரமெல்லாம் வேண்டாம்.. என அது ஒத்துக்காது..?!! என சொல்லி விடுவேன்..?? அவர் நம்மை விசேஷ ஜந்துவை போல் பார்ப்பார்..! அதுவா முக்கியம் நமக்கு சக்கரை நோய் இல்லை என்பதை பூரூப் பண்ணணும்..பாஸு..?!!
ஆனாலும், ஹார்ட் அட்டாக்கை பற்றி அப்படி நினைக்க முடியவில்லை.. நெருங்கிய.. நண்பருக்கு அது வந்து அதன் தொடர்பான பாதிப்புகள் கண் முன்னால் காண நேரிட்ட போதும்...வெகு சமீபத்தில் கல்லூர் நண்பர், ஹெல்த் இன்ஸ்பெக்டராக அரசு பணியில் இருந்து கொண்டு தனியாக மருத்துவமனை கிளினிக் வைத்து கொண்டு, மற்றும் வீட்டிலும் சுற்று வட்டாரத்தில் ஒரு டாக்டராகவே பாவித்து..வைத்தியம் பார்த்து கொண்டு நல்ல சம்ப்பாத்தியத்தில்..தனது ஒரு மகனை டாக்டருக்கு வெளி நாட்டில் படிக்க வைத்து.. மற்றொரு மகனையும் தன்னை போலவே மருத்துவபணிக்கு?!!. தயார் செய்து கொண்டிருந்தவர்,
திடிரென, வெகு சமீபத்தில், முதுகு வலி என, மகனுடன் காரில் சென்று, பிரபல மருத்துவமனைக்கு தானே, சென்று, மருத்துவருடன் உரையாடி, இயல்பாக, எந்த வித அபாயமும் இல்லாமல், இ சி ஜி எடுத்த போது, திடிரன இறந்து விட்டார்..! ஊருக்கே வைத்தியம் பார்த்தவர், தன்க்கு ஹார்ட் அட்டாக் வந்ததை வருவதை அறியாமல் இருந்தது தான்..வெகு ஆச்சர்யம்..!
இதை விட, என்னுடன் ஒன்றாம், இரண்டாம் வகுப்பு படித்தவன், உடல் வாகில் அவனை, இன்று வரை அனைவரும் தேக்கு என்றே புனைப்பெயருடன் அழைப்பார்கள்.. அவன் திடிரென மாரடைப்பால் இறந்தது, ஹார்ட் அட்டாக்கின் பரிமாணத்தை மேலும் சிந்திக்க வைக்கிறது.. ஒரு நடுத்தர குடும்பம் ஹார்ட் அட்டாக்கினால் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவு செய்வதோ, அல்லது ஏற்படும் உயிரிழப்போ, அந்த குடும்பத்தை, அதன் முன்னேற்றம் வளர்ச்சியில் இருந்து சட்டென பல ஆண்டுகளுக்கு பின் தள்ளி வைத்துவிடுகிறது..?! தீ விபத்தில் ஒரு குடும்பம் அனைத்தையும் தீயிக்கு இரையாக்கி, மீண்டும் புதிதாக வாழ்வை ஆரம்பிப்பது போல துயரமானது அது....!?!
மேற்குறிப்பிட்ட, தேக்கு என்பவன் என்னுடன் இரண்டாம், மூன்றாம் வகுப்பு படித்த காலத்தில், அவன் உடல் வாகினால் பொறாமை கொண்டு, அவனுடன் மதிய இடைவேளையில் கூட்டமாக சண்டையிடுவோம்...அதாவது அவனை போட்டு அனைவரும் அடிப்பார்கள்..?! நான் மட்டும் அவனுக்கு பிரண்ட்..?!, ஒரு வெயில் கால மதிய உணவு இடைவேளையில்.. நானும் கூட்டத்தோடு கூட்டமாக..அவர் பார்க்கவில்லை என்ற தைரியத்தில் அவனை முதுகில் அடித்து விட்டேன்..?!! நம்ம சுழியும் சும்மாவா என்ன..?!! எல்லாவற்றை விட, இன்று வரை ஆச்சர்யம், பள்ளி விடும் போது, என்னிடம், “ என்னை நீ ஏண்டா அடிச்ச..?! என கேட்டது தான்..?! நான் அவனை அந்த கூட்டத்தில்..அடித்தது எப்படி அவனுக்கு தெரிந்தது..?!! இன்று வரை எனக்கு தெரியாத..புரியாத புதிர்..?!!?
பரஸ்பரம், 53 வயதாகும் நிலையில் எப்போதாவது பார்க்கையில் புன்னைகை செய்து, நலம் விசாரித்துக்கொள்வோம்..!! கூச்சத்துடன் என்னை பார்த்து சிரிப்பான்..! ஆனாலும் அவன் கேட்ட கேள்வி மட்டும்.. பதிலின்றி தொடரும்.!?!.இன்று அவன் இல்லை..கேள்வி மட்டும் அப்படியே இருக்கிறது..?!!
பிரபல இருதய மருத்துவர், திரு.சொக்கலிங்கம் ஒரு முறை சொன்னது, இப்போதும் நினைவில் இருக்கிறது.. “ இறந்த காலம் என்பது உடைந்த போன பாணை...!? எதிர்காலம் என்பது மதில் மேல் பூனை....!? நிகழ் காலம் மட்டுமே கையில் உள்ள வீணை.?!.” இது இதயம் சம்பந்தபட்ட நோய்களுக்கு முற்றிலும் பொருந்தும் என்றே தோன்றுகிறது...!?
.ஆமாம்..ரொம்ப நாளா, ரொம்ப வருசமா... ஒரு சந்தேகம்...இருதய பரிசோதனைக்கு டாக்டரை பார்த்து பரிசோதித்து கொள்ளலாமா..?!? அல்லது தனியாக ”லேபி”ல் செய்து கொள்ளலாமா..??!?..லேப் என்றால் ரிப்போர்டை டாக்டரிடம் காட்டினால் ஒத்து கொள்வாரா..?!! அல்லது அவரே பரிசோதிக்க வேண்டும் என்பாரா..?!! இத்யாதி..இத்யாதி சந்தேகங்கள்......!?
இப்ப கொஞ்சம் வேலை இருக்கிறது...!? அப்புறமா விசாரித்து சொல்லுங்கள்..?! நீங்கள் சொல்லா விட்டாலும் பரவாயில்லை.!!??!!
நாக.பன்னீர் செல்வம்.....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக